தூத்துக்குடியில் வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய ரவுடி கும்பல்: ஆவுடையாபுரம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி ஆவுடையாபுரம் பகுதி மக்கள் தங்களது வீட்டை காலி செய்யுமாறு ஒரு ரவுடி கும்பல் மிரட்டி வருவதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-தூத்துக்குடி ஆவுடையாபுரத்தில் நாங்கள் நூறு வருடங்களாக நான்கு தலைமுறைகளாக வசித்து வருகிறோம். இங்கு 48க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எங்களை வீட்டை காலி செய்யுமாறு ரவுடிகள் மிரட்டி வருகிறார்கள். இதனால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

வாட்ஸ்-அப் – https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

எளிய முறையில் அனைத்து விதமான கடன் பெற உடனே அழைக்கவும்.