செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்: தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செய்தியாளர் நேசபிரபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் வேகமாக பரவியதை தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுகிறோம்.தமிழகத்தில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திடும் வகையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.