செய்தியாளர் மீது தாக்குதல்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செய்தியாளர் நேசபிரபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பவம் நடப்பதற்கு முன் செய்தியாளர் பாதுகாப்பு கோரியும் நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் செய்தியாளர் நேச பிரபுவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

For Advertisment Contact Phone Number 24/7:9655550896