ஆசிய பாரா விளையாட்டு:விளாத்திகுளம் வீரர் தங்கம் வென்றார்

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் டி-64 பிரிவில் தமிழகத்தை சேர்ந்த விளாத்திகுளம் ஏ.குமராபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதேபிரிவில் இலங்கை வீரர் மத்தக கமாகே 6.68 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பான் வீரர் மதாயோஷி கோட்டோ 6.35 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
தங்கம் வென்ற தமிழக வீரர் தர்மராஜ் சோலை ராஜுக்கு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.