ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை மறுநாள் ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குகிறது. இருப்பினும் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், படகுபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் மட்டும் முன்னதாகவே தொடங்கி நடந்து வருகிறது.

கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 21 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் வங்காளதேசத்துடன் மோதுகிறது. இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்று இருந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தினால் மட்டுமே,இந்தியா அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.