ஆசிய கோப்பை இறுதிபோட்டி;இந்தியா vs இலங்கை இன்று மோதல்

ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டி இன்று மாலை 3 மணிக்கு கொழும்பில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பைகளில்‌ இந்தியா 7 முறை, இலங்கை 6 முறை கோப்பையை வென்றிருக்கிறது. இரு அணிகளும் நேருக்கு நேர்‌ 8 முறை இறுதிப்போட்டியில்‌ சந்தித்ததில்‌, இந்தியா 5 முறை, இலங்கை 3 முறை வென்றிருக்கிறது. இதனால்‌ இன்றைய போட்டி மிகவும்‌ சுவாரஸ்யமாகவும்‌, விறுவிறுப்பாகவும்‌ இருக்கும்‌.