தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால் வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அகில இந்திய மார்வாடி யுவா சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் கை ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் .பிரம்மசக்தி, அகில இந்திய மார்வாடி யுவா சங்க தலைவர் விஜய் ஷர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.