பேரறிஞர் அண்ணா 55வது நினைவு நாள்: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி..!

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவிலிருந்து பாளைரோடு வழியாக காய்கறி மார்க்கெட் சந்திப்பு வரை தி.மு.க.வினர் அமைதி பேரணியாக சென்றனர். தொடர்ந்து காய்கறி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதிக் கழக செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.