உ.பியில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

 

உ.பி.,யில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. அதில் INDIA கூட்டணிக்கான தொகுதிப் பங்கீட்டை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சமாஜ்வாதி கட்சிக்கு 57 தொகுதிகளும்,ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்கு 7 தொகுதிகளும்,காங்கிரஸுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க காங்கிரஸ் மறுத்துள்ளது.