பாஜக.,வுடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக!

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே உச்சகட்ட மோதல் நிலவி வரும் நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது என அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேபி முனுசாமி, பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.