நாளை(பிப்-19) தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

நடிகர் விஜய், கடந்த பிப்.2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்கிடையில் கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” என்ற இலக்கணப்பிழை இருப்பதாக பலர் விமர்சனம் செய்தனர். இதனால்தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்து “தமிழக வெற்றிக் கழகம்” என்று மாற்ற விஜய் ஒப்புதல் அளித்தார். அதனை உறுதி செய்யும் வகையில் அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்திலும் “தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அக்கட்சியின் உட்கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிய முறையில் அனைத்து விதமான கடன் பெற உடனே அழைக்கவும்.