நடிகர் மாரிமுத்து மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது X தள பக்கத்தில், இரங்கல் செய்தியை .

பகிர்ந்து கொண்டார் அவரது குறிப்பில், தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம், அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.