புதுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம்,புதுக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது செய்யப்ட்டார். அவரிடமிருந்து ரூ,5 ஆயிரம் மதிப்புள்ள 44 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் உதவி ஆய்வாளர் முத்து வீரப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சக்திவேல், ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய போலீசார் நேற்று (26.11.2023) புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டம்புளி பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் உதயகுமார் (62) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து உதயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூ,5 ஆயிரம் மதிப்புள்ள 44 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.