தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் 80% இன்று வழக்கம்போல் இயங்கும்! தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 80% பேருந்துகளும் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை தங்களது பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன், “தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். எங்கள் சங்கத்தில் 1,500 வாகனங்கள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால்,120 ஆம்னி பேருந்துகளை அரசு பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது.பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46