தமிழகத்தில் சோகம்:ஒரே கிராமத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசு கடைகள், குடோன்கள் உள்ளன.இந்த நிலையில் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் நேற்று வந்து இறங்கின. அப்போது பட்டாசு பெட்டிகளை இறக்கும்போது திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.


இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே உள்ள வேட கட்டமடுவு ஊராட்சி,டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன் (21 ) இவர் ஒருவர் மட்டுமே திருமணமானவர், ஆதிகேசவன்(18), சச்சின் என்கின்ற முனிவேல் 20), இளம்பருதி (19), விஜயராகவன் (19),ஆகாஷ் (18) கிரி (18). ஒரே கிராமத்தினைச் சேர்ந்த 7 பேர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த பட்டாசு விபத்து ஏற்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.