செங்கம் அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து:7 பேர் உடல் நசுங்கி பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய வியத்தில் 7 பேர் பலி, ஒரு பெண் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்படட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை பார்த்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை ஊரை சேர்ந்த சதீஷ்குமார் நேற்று மேல்மலையனூரில் மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு இன்று காலை சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு செல்லும் போது கார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது சிங்காரப்பேட்டையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரியும் அந்தனூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த சதீஷ்குமார் (40)சர்வேசன்(6),சிந்து(3)மணிகண்டன்(42),ஹேமன்(41),மற்றும் ஒரு பெண் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் விபத்தில் படுகாயமடைந்த காவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செங்கம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறறார்கள்.