தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 41ஆவது பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 41ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. காமராஜர் கல்வி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காமராஜ் கல்லூரியின் செயலாளர் சோமு தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஜெ.பூங்கொடி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.இவ்விழாவில் 12 பாடப்பிரிவுகளில் மொத்தம் 479 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.