தூத்துக்குடியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது

தூத்துக்குடியில் செல்போனை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை  போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சாயர்புரம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ராஜகோபாலகிருஷ்ணன் மகன் செல்வகுமார் (32) என்பவர் கடந்த 31.10.2023 அன்று தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (26), தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த முருகன் மகன் சூரிய பிரகாஷ் (20), தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்தவர்களான மாரிச்செல்வம் மகன் முனீஸ்குமார் (21) மற்றும் மாடசாமி மகன் சுப்புராஜ் (20) ஆகியோர் மேற்படி செல்வக்குமாரை கல்லால் தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் இசக்கி செல்வம், சூரியபிரகாஷ், முனீஸ்குமார் மற்றும் சுப்புராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 15,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்கபணம் ரூபாய் 500/-யும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.