திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது

திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் ரோடு எஸ்.கே நகரை சேர்ந்த நல்லக்கண்ணு மகன் மந்திரம் (53) என்பவர் கடந்த 26.11.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை திருச்செந்தூர் – குலசேகரன்பட்டினம் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து மந்திரம் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பீர்முகமது மகன் ரசூல் (21), தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தல் பகுதியை சேர்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி (29) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் முத்துகிருஷ்ணன் (எ) முத்து (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் வழக்குபதிந்து இருசக்கர வாகனத்தை திருடிய ரசூல்,மாடசாமி,முத்துகிருஷ்ணன் (எ) முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து,இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.