2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். நீண்ட காலமாகவே விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட போகிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இந்நிலையில் நடிகர் விஜய் இன்று திடீரென தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை சற்றுமுன் வெளியிட்டிருக்கிறார்.இதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர்.இதன் தலைவராக விஜய் செயல்பட இருக்கிறார். இதையொட்டி TVK Vijay என்ற பெயரில் தனியாக சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முதல் பதிவாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில் முக்கியமாக 2024 நாடளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை என்றும், 2024 நாடளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சி கொடி, சின்னம் , கொள்கை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்றும், அதன் பிறகு மக்களை நேரடியாக சந்திக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.மேலும், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தான் தமிழக வெற்றி கழகத்தின் இலக்கு என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் . மேலும், நிர்வாக சீர்கேடுகள் நிறைந்த ஊழல் நிறைந்த அரசியல் ஒரு புறம் என்றும் மத ரீதியில் மக்களை பிரித்து செயல்படும் மதவாத அரசியல் ஒருபுறம் என தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளது தமிழக மற்றும் தேசிய அரசியலில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

            உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896