திருவள்ளூர்:போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் – புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி முத்து சரவணனை பிடிக்க காவல் துறையினர் முயற்சித்துள்ளனர். அப்போது முத்து சரவணன்,மற்றொரு ரவுடியான சண்டே சதீஸ் ஆகியோர் சேர்ந்து காவலர்களை தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் தப்ப முயன்ற போது,போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடிகள் முத்து சரவணன்,சண்டே சதீஸ் உயிரிழந்தனர்.

 

இதில் பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் முத்து சரவணன். இவர் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.