தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி மீளவிட்டான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு மனைவி ராமலட்சுமி (44). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் ஒரு ஆட்டை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராமலட்சுமி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரைச் சேர்ந்த முத்து முகம்மது மகன் நாகூர்மீரான் (24), செட்டிகுமார் மகன் சரவணகுமார் (19) ஆகிய 2பேர் ஆடு திருடியது தெரியது வந்தது.இதையடுத்து சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிந்து ஆடு திருடிய 2 பேரை கைது செய்தனர்.

For Advertisment Contact Phone Number 24/7:9655550896