108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிகள்: தூத்துக்குடியில் நாளை (7ஆம் தேதி) நேர்முகத்தேர்வு

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடியில் மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளை (7ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்:
கல்வித்தகுதி : B.Sc நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் ) அல்லது Life Science Graduates (B.Sc Zoology, Botony, Bio-Chemisty, Micro-biology, Bio – Technology, Plant Biology)
மாத ஊதியம் : ரூ.15435/- (மொத்த ஊதியம்) வயது : நேர்முக தேர்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
பாலினம் : ஆண் மற்றும் பெண் தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2.மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்.

ஓட்டுனருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி

மாத ஊதியம் : ரூ.15235/- மொத்த ஊதியம்)

வயது : நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

பாலினம் : ஆண் மற்றும் பெண்

உயரம் : 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் தகுதி : இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை: 1. எழுத்துத் தேர்வு, 2.தொழில் நுட்பத் தேர்வு 3.மனிதவள துறை நேர்காணல், 4.கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, 5. சாலை விதிகளுக்கான தேர்வு 6.சோதனை ஓட்டம் (Test Drive). மேலும் விவரம் அறிய விரும்புவோர்: 78977 24822, 91542 68808, 73977 24841, 78977 24825 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கு கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும். கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.