கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில் தகுதி உள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரை தேர்வு செய்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகையான மாதம் 1000 ரூபாய் தொகை செலுத்தப்பட உள்ளது.

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில் தகுதி உள்ளவர்கள் என 1 கோடியே6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. எந்தெந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது.

மேல்முறையீடு :விண்ணப்பத்தின் நிலை குறித்து எஸ்.எம்.எஸ் மூலமாக விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணிற்கு வரும் 18 ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்கப்பெறாமல் இருக்கும் நபர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால்,எஸ்.எம்.எஸ் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வாயிலாக வருவாய் கோட்டாச்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம் .மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

——————————————————————————————————————————————————————————