ப்ரோ கபடி லீக் தொடர்:தமிழ் தலைவாஸ் – பெங்கால் வாரியர்ஸ் இன்று மோதல்

10-வது ப்ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் இன்று இரவு 8 மணிக்கு அரியானாவில் தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் தபாங் டெல்லி – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.