தூத்துக்குடி:பொது இடங்களில் ஜாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழிக்கும் மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள 40 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழிப்பு – இதுவரை மொத்தம் 6153 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:இன்று (23.09.2023) திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பவிளை, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்ட கந்தன்குடியிருப்பு, மூலக்கரை, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமச்சந்திரபுரம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் 40 மின்கம்பங்களில் அப்பகுதி ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.இதுவரை மொத்தம் 6153 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.