திருச்செந்தூரில் மூதாட்டியிடம் 9 பவுன் செயின் பறிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள தலைவன் கோட்டையைச் சேர்ந்தவர் ராமஜெயம் மனைவி வேல்துரைச்சி (60). இவர் நேற்று குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு நடந்து செல்லும் வழியில் மர்ம நபர் வேல்துரைச்சி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துச் சென்றுவிட்டாராம்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.