சமூக நீதி நாளை முன்னிட்டு எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதி நாளை (17.09.2023) முன்னிட்டு இன்று (15.09.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த உறுதிமொழியில் ஏற்பு நிகழ்ச்சியில் காவல் கட்டுபாட்டு அறை ஆய்வாளர்  ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள்  மாரியப்பன், மயில்குமார்,  மாரிமுத்து உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.